நாட்டை மீண்டும் முடக்கும் எண்ணம் இல்லை! – அஜித் ரோகண

நாட்டை மீண்டும் முடக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், நாடு மீண்டும் முடக்கப்படுமா என்று எழுப்பப்பட்டிருந்த கேள்விக்குப் பதிலளித்த பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர் என்றும் எனவே, நாட்டை மீண்டும் முடக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத் தொற்றாக மாறாவிட்டாலும், கொரானா அச்சுறுத்தல் இன்னமும் இருக்கிறது என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

எனவே சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!