பரிசோதனைகளை நடத்தாது எந்த பிரதேசமும் ஆபத்தான பிரதேசமும் என அறிவிக்க முடியாது.- அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்?

தினமும் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளை அதிகரிக்குமாறு தமது சங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த போதிலும் அது குறித்து அதிகாரிகள் இதுவரை கவனம் செலுத்தவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட அனைத்து நபர்களையும் PCR பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட நபர்கள் சம்பந்தமாக குறிப்பிடத்தக்களது பரிசோதனைகளை நடத்தாது எந்த பிரதேசமும் ஆபத்தான பிரதேசமும் என அறிவிக்க முடியாது.

தினமும் குறிப்பிடத்தக்களவான நபர்களை பரிசோதனை செய்ய வசதிகள் இருக்கும் போது, அப்படியான நடவடிக்கைகளை எடுக்காது பாரதூரமான பிரச்சினை.

குறிப்பாக அரசியல் அதிகார தரப்புக்கு தேவையான அறிவுறுத்தல்களை சுகாதார அதிகாரிகள் வழங்காதது கேள்வி எழுப்ப வேண்டிய பாரதூரமான நிலைமை எனவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் அப்படி நடந்ததால், முழு நாடும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!