வடக்கு மக்கள் வாக்களிக்கும் ஆர்வம் இல்லை!

வடக்கில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வம் குறைவாக இருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று சூழலில், மக்கள் வாக்களிப்பதற்கு வருவதற்கு தயங்கும் சூழல் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

முதிய வாக்காளர்களும், குறிப்பாக, வடக்கில் உள்ள தமிழ் பேசும் வாக்காளர்கள் தேர்தலில் ஆர்வம் காட்டுவது குறைவாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர்களை வாக்களிக்க வரச் செய்வதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு முயற்சிக்கும் என்றும், தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச, வழக்கமாக 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகும் என்றும், இப்போது 75 சதவீதத்திற்கும் குறைவான வாக்குப்பதிவு இருந்தால், அது தமது தோல்வியாக இருக்கும் என்றும், கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!