ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கோஷ்டி மோதல்: – பெண் சுட்டுக் கொலை

உத்தரப்பிரதேசம் மாநிலம் இடாவா மாவட்டத்தில் உள்ள பர்சாவ்னா கிராமத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த இரு பிரிவினருக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 55 வயதான பெண்மணி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த மோதலில் 6 பெண்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!