புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்ப்பு! – விசாரணைக்கு உத்தரவு.

வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் இரண்டாவது புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்கு ஐவர் அடங்கிய நிபுணர் குழுவொன்று பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளது.

இதனை, கலாசார மற்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவைக் கட்டடம் கடந்த 14 ஆம் திகதி தகர்க்கப்பட்டமை தொடர்பில் துரித விசாரணையை மேற்கொள்ளுமாறு இந்தக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கையை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!