எளிமையான முறையில் நடைபெற்ற இங்கிலாந்து ராணியின் பேத்தியின் திருமணம்!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியும், இளவரசர் ஆண்ட்ரூவின் மகளுமான இளவரசி பீட்ரைசுக்கு (வயது 31) நேற்று மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. கோடீஸ்வரரும், பிரபல தொழிலதிபருமான எடோர்டோ மாபெல்லி மோஷியை (37) அவர் கரம் பிடித்தார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த மே மாதம் பிரமாண்டமான முறையில் திருமணம் நடக்க இருந்தது.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்களது திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இளவரசி பீட்ரைசுக்கும் எடோர்டோ மாபெல்லி மோஷிக்கும் ரகசியமான முறையில் மிகவும் எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்த திருமண விழாவில் ராணி இரண்டாம் எலிசபெத் தனது கணவர் பிலீப் மற்றும் மகன் ஆண்ட்ரூவுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இந்த திருமண விழாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!