ஊரடங்கு நேரத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட பாலியல் உபகரணங்கள்: தமிழகத்திற்கு 3-வது இடம்!

ஊரடங்கில் எல்லா துறைகளும் முடங்கி கிடக்கும்போதும், பாலியல், உபகரணங்கள் உற்பத்தி துறை மட்டும் லாபத்தை அள்ளிக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் மூலம் பாலியல் பொம்மை மற்றும் உபகரணங்களை பலர் ஆர்டர் செய்து வருகின்றனர். சமீபத்திய புள்ளி விவரத்தின்படி, இத்தகைய ஆன்லைன் ஸ்டோர்களை பார்ப்போர் எண்ணிக்கை 2.2 கோடியாக உயர்ந்துள்ளது.மொத்தம் 3,35,000 பாலியல் உபகரணங்கள் விற்று தீர்ந்துள்ளன. இது தொடர்பாக, செக்ஸ் பொம்மை, உபகரணங்களை ஆன்லைனில் விற்கும் தட்ஸ்பர்சனல்.காம் நிறுவனம் சார்பில் சமீபத்தில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. இதில், ஊரடங்கிற்கு பிறகு கடந்த சில மாதங்களில் மட்டும் செக்ஸ் பொம்மை, உபகரணங்கள் விற்பனை இந்தியாவில் 65 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது.

மாநிலங்களை பொறுத்தவரை இந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பது மராட்டியம். அதற்கு அடுத்து கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளது. நகரங்களை பொறுத்தவரை மும்பை முதல் இடத்திலும், பெங்களூரு, டெல்லி ஆகியவை 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளன. சராசரி ஆர்டரில் சூரத் நகரம் முதலிடத்தில் உள்ளது. இங்கு சராசரியாக ஒரு ஆர்டர் மதிப்பு ரூ.3,900 ஆக உள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கியபோதே காண்டம் உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியது. பல இடங்களில் தட்டுப்பாடு நிலவியது.

பாலின வாரியாக பாலியல் உபகரணங்களை ஆர்டர் செய்வோர் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உத்தர பிரதேசத்தில்தான் அதிகமான ஆண்கள் ஆர்டர் செய்துள்ளனர். இருப்பினும் விஜயவாடா, ஜாம்ஷெட்பூர், பெல்காம், வதோதரா ஆகிய நகரங்களில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகமான உபகரணங்களை வாங்கியுள்ளனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பாலியல் உபகரணங்கள் அதிகம் தயாரிக்கப்படுவது சீனாவில்தான். இவற்றின் ஏற்றுமதி 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் சீன தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா,இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து ஆர்டர்கள் குவிந்து கொண்டே உள்ளன. பெரிய தொழிற்சாலைகள் மாதம் சராசரியாக 2,000 பொம்மைகளும், சிறு தொழிற்சாலைகள் 300 முதல் 500 பொம்மைகளும் உற்பத்தி செய்கின்றன.

இந்திய மதிப்பில் இவற்றின் விலை ரூ.38,500 வரை உள்ளது. உற்பத்தி அதிகரிப்பால் தொழிற்சாலைகளில் 25 சதவீதம் முதல் 4 மடங்கு வரை ஊழியர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சீன பொருள்களுக்கு எதிர்ப்பு இருந்தாலும், ‘இந்த விஷயத்தில்’ பாரபட்சமே இல்லாமல் எல்லா நாட்டிலும் அவற்றிற்கு அமோக வரவேற்பு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!