ஒழுங்கான விதத்தில் நடந்துகொள்ளுங்கள் – பசில் சாடல்

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களையும் கட்சியின் தற்போதைய மேயர்கள் மற்றும் உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களையும் ஒழுங்கான விதத்தில் நடந்துகொள்ளுமாறும் பசில் ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

மகிந்த மேர்வினுக்கு இரக்கம் காட்டியதுபோல் இம்முறை அப்படி நடக்காது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொருத்தமற்ற சில வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியமைக்காக பொதுஜனபெரமுனவின் தேர்தல் வேட்பாளர் நியமன சபையை பசில் ராஜபக்ச கடுமையாக சாடியுள்ளார்.

சமீபத்தில் பெண்வேட்பாளர் ஒருவர் வீடியோவொன்றை எனக்கு அனுப்பி பொதுஜனபெரமுன கழுதைகளுக்கும் குதிரைகளுக்கும் வேட்புமனுவை வழங்கியுள்ளது என குறிப்பிட்டார்.

நான் அதனை மறுத்ததுடன் நிச்சயமாக கட்சியின் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான சபையில் கழுதையொன்று இருக்கவேண்டும் அதன் காரணமாகவே உங்களுக்கு வேட்புமனு கிடைத்துள்ளது என தெரிவித்தேன் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!