தான்சானியா நாட்டின் முன்னாள் அதிபர் திடீர் மரணம்!

ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவின் பிரதமர் இகோர் மாடோவிக்குக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் தப்பினார். மொத்தமுள்ள 125 உறுப்பினர்களில் 78 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். சீனாவில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் அதிபர் ஜின்பிங் கை விமர்சித்து வந்த அரசு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர் ரென் ஷிகியாங் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதோடு அவர் மீது ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

* பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேர் பலியாகினர். இதனை கண்டித்து உள்ளூரைச் சேர்ந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

* குரோஷியாவில் தற்போதைய பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளன்கோவிக் தலைமையில் புதிய அரசை அமைக்க அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

* தான்சானியா நாட்டின் முன்னாள் அதிபர் பெஞ்சமின் வில்லியம் காபா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 81.

* ரஷியாவின் கம்சட்கா பிராந்தியத்தில் நேற்று அடுத்தடுத்து 3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் அதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி தகவல்கள் இல்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!