ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கிய 60-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்ப உதவிய 13 வயது சிறுமி!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், 13 வயது சிறுமி மற்றும் தொழிலபதிபரின் உதவியால நாடு திரும்பியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகில் பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சொந்த நாட்டை விட்டு வேறொரு நாட்டிற்கு சென்ற ஏராளமான மக்கள் தங்கள் நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

அவர்களுக்காக சில சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பொருளாதார நெருக்கடியால் பலரும் விமான டிக்கெட்டிற்கு கூட சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் Ananya Srivastava என்ற 13 வயது மாணவி மற்றும் தொழிலதிபரின் உதவியால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 68 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்த 13 வயது சிறுமி ஷார்ஜாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தானும் உதவி செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதன் படி தான் சேமித்து வைத்திருந்த ரூபாய் 61 ஆயிரம் பணத்தை வைத்து இரண்டு இந்தியருக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து உதவியுள்ளார்.

மேலும் துபாயை சேர்ந்த தொழிலதிபரான Amiruddin Ajmal 20 லட்சம் ரூபாய் செலவு செய்து 66 பேருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார். இந்திய மக்கள் பலரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ளதை அறிந்து அவர்களுக்கு உதவுவதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். அவர்கள் மீண்டும் தனது குடும்பத்தினருடன் சேர்த்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என தான் நினைப்பதாக தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!