சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்படுகிறது!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இன்று (28) இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து தமது தொழிற்சங்க போராட்டத்தை நாளை (29) காலை 7.30 மணி முதல் கைவிடுவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.

சுகாதார அமைச்சரின் கருத்து மற்றும் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார அறிவுறுத்தல் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பில் தமக்கு அதிகாரம் வழங்கவில்லை என்பதை கண்டித்தும் கடந்த 10 நாட்களாக பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!