திருப்பி அழைக்கும் நடவடிக்கை மீள ஆரம்பம்!

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீள அழைத்து வருவதற்கான விமான சேவைகளை நாளை மறுநாள் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு விமானங்களின் மூலம் டுபாயில் இருந்து 600 இலங்கையர்கள் ஏற்றி வரப்படவுள்ளனர் என்று ஜனாதிபதியின் வெளிநாட்டு உறவுகளுக்கான மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்து வரும் நாட்களில் சவூதி அரேபியா, ஜோர்தான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து விமானங்களில் இலங்கையர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவதற்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்றும் அவர்களில் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்றும் அட்மிரல் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!