பிரித்தானிய நீதிமன்றத்தின் தீர்ப்பால் கணவனை கொலை செய்யும் அளவுக்கு சென்ற மனைவி!

விவாகரத்து வழக்கில் குழந்தைகள் கணவனுடன் வாழ உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து கணவனைக் கொலை செய்ய மூன்று பேரை ஏற்பாடு செய்துள்ளார் ஒரு மனைவி! பிரித்தானியரான Victoria Breeden (39), 1999ஆம் ஆண்டு Rob Parkesஐ பல்கலைக்கழகத்தில் பயிலும்போது சந்திக்க, இருவரும் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஆனால், 2008ஆம் ஆண்டு இருவரும் பிரிய, நீதிமன்றம் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை Robஇடம் அளித்தது.

இதனால் கோபமடைந்த Victoria கடந்த ஐந்து வருடங்களில் மூன்று பேரை சந்தித்து தன் கணவரை கொலை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார். 2014 ஜனவரி 1க்கும் டிசம்பர் 31க்கும் இடையில் தன் அயலகத்தாரான Hamish Lowry-Martin என்பவரையும், 2018ஆம் ஆண்டு அக்டோபர் 19க்கும் 2019 அக்டோபர் 3க்கும் இடையில், தன் முன்னாள் காதலனான Graham Wall என்பவரையும், 2019ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் திகதி தனது நண்பரான Earl Gernon என்பவரையும் சந்தித்து, ஏராளமான பணம் தருவதாக கூறி, தன் கணவரை கொலை செய்யும்படி வற்புறுத்தியுள்ளார் Victoria.

இதற்கிடையில், தன்னுடன் பழகும் Victoria, Gernon உடன் தவறான உறவு வைத்திருப்பதாகவும் தனக்கு துரோகம் செய்வதாகவும் எண்ணிய Victoriaவின் முன்னாள் காதலனான Wall, அதைக் கண்டுபிடிப்பதற்காக தனது மொபைலை மறைத்து வைத்து இருவருக்குமிடையிலான உரையாடலை பதிவு செய்ய, அதில் Robஐ கொலை செய்ய இருவரும் போட்ட திட்டம் பதிவாக, அது நீதிமன்றத்தில் ஒலிக்கச் செய்யப்பட்டது. கணவனை திட்டமிட்டு கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக Victoria கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!