கொழும்பு முதல் இரத்தினபுரி வரையான அதிவேக நெடுஞ்சாலை விரைவில்

வேலை செய்யக்கூடியவர்களிடம் நாட்டை ஒப்படைப்பதற்கான காலம் வந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகல, கஹவத்த பிரதேச சபை மண்டபத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யுத்தத்தை நிறைவு செய்து விரைவான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு திட்டமிட்டிருந்தாலும், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமையால் நாட்டின் அபிவிருத்தி ஸ்தம்பித்ததாக பிரதமர் தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக வீணாக வீதியில் செலவிடப்படும் காலத்தை குறைத்து, மக்களின் நன்மை கருதி செயற்படுவதற்கான காலம் விரைவில் உதயமாகும், கொழும்பு முதல் இரத்தினபுரி வரையான அதிவேக நெடுஞ்சாலை விரைவில் அமையும் என குறிப்பிட்டார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் தலைவர் என்பதால் அவருடைய சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை அங்கீகரித்தது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!