போதைப் பொருள் டீலிங்; பொலிஸாரின் சொத்துக்கள் அரசுடமையாக்க தீர்மானம்!

போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகளின் சொத்துக்களை அரசுடமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகள் முறையற்ற வகையில் திரட்டிய பணத்தால் சேகரித்த சொத்துக்களையே அரசுடமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதி தூய்தாக்கல் சட்டத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தகவல்கள் தற்போது திரட்டப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 21 பொலிஸ் அதிகாரிகளில் 13 அதிகாரிகளை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க இன்று (04) நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏனைய 8 அதிகாரிகள் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!