பவ்ரல் சார்பில் 5000 கண்காணிப்பாளர்கள்!

பொதுத் தேர்தலுக்காக சுமார் 5,000 கண்காணிப்பாளர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று உள்ளூர் கண்காணிப்பாளர்கள் 3,045 பேர், காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

அத்தோடு, வாக்களிப்பு நிலையங்களை அண்டிய நிலைமைகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.

மேல் மாகாணத்தில் 45, மத்திய மாகாணத்தில் 35, தென் மாகாணத்தில் 31, வட மாகாணத்தில் 40, கிழக்கு மாகாணத்தில் 21, வடமேற்கு மாகாணத்தில் 27, வட மத்தியில் 18, ஊவா மாகாணத்தில் 19, சப்ரகமுவ மாகாணத்தில் 24என 260 வாகனங்களில் 1,092 கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வாக்குகள் எண்ணும் நிலையங்களில் வாக்கு பெட்டிகளை பொறுப்பேற்கும் நிலையங்களில் 25 பேரும், 160 தேர்தல் தொகுதிகளிலும் 160 பேரும், தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் 25 பேரும் கடமைகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!