மக்களை இன்னல்படுத்தும் இ-பாஸ் முறை இனி தேவையில்லை: மு.க.ஸ்டாலின்

மக்களை இன்னல்படுத்தும் இ-பாஸ் முறை இனி தேவையில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் பெறுவது கட்டயம் ஆக்கப்பட்டுள்ளது. இ- பாஸ் பெறுவதில் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாகவும் புரோக்கர்கள் மூலமாக இ பாஸ் பணம் பெற்றுக்கொண்டு வழங்கப்படுவதாகவும் சமீப காலமாக பரவலாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை இனி தேவையில்லை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் #epass நடைமுறை வெளிப்படைத்தன்மையற்று ஊழலுக்கு வழிவகுக்கிறது.

திருமணம், இறப்பு உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டு மக்கள் துன்பத்திற்குள்ளாகிறார்கள். முழுமையாகத் தோல்வியடைந்துவிட்ட இ-பாஸ் இனியும் தேவையற்றது. உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்! என்று தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!