19 ஒழிக்கப்படுவது உறுதி!

19வது திருத்தத்தை அவசியமான தருணத்தில் நீக்குவதற்கு பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது என கொழும்பு மாவட்டத்தில் அதிகவாக்குகளை பெற்ற சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

19 வது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் காரணமாக சுயாதீன நிலைமை ஏற்பட்டுள்ளதா? இந்த ஆணைக்குழுக்கள் அரசதுறை ஊழியர்களின் நடவடிக்கைகளை முடக்கும் நடவடிக்கையை மாத்திரம் செய்துள்ளன.

இந்த ஆணைக்குழுக்களால் ஜனாதிபதியின் அதிகாரம் பறிபோயுள்ளது. 19வது திருத்தத்தின் மோசமான விளைவுகளை நாங்கள் இன்னமும் எதிர்கொள்கின்றோம்,இந்த திருத்தம் நாட்டின் பல துறைகளில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!