பெண்களின் நாடாளுமன்றப் பிரவேசம் மேலும் வீழ்ச்சி!

புதிய நாடாளுமன்றத்துக்கு 8 பெண்கள் தெரிவு செய்யபட்டுள்ளனர். தேர்தலில் 59 பெண்கள் போட்டியிட்ட போதும் அதில் 8பேரே நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

30 வீத பெண் பிரதிநிதித்துவம் கோரப்படுகின்ற நிலையில் 2015ஆம் ஆண்டு 12பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர். இது 5.8வீத பிரதிநிதித்துவத்தை பிரதிபலித்தது.

இந்தமுறை இந்த எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளதுடன், இந்த முறை நாடாளுமன்றத்தில் தமிழ் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போயுள்ளது.

கம்பஹாவில் இருந்து பொதுஜன பெரமுனவின் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே, கோகிலா ஹர்சினி, மாத்தளையில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் ரோஹனி குமாரி கவிரட்ன, காலியில் இருந்து பொதுஜன பெரமுனவின் கீதா குமாரசிங்க. இரத்தினபுரியில் இருந்து பொதுஜன பெரமுனவின் சார்பில் பவித்ரா வன்னியாராச்சி, முதித்தா பிரியதர்சினி, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தலதா அத்துகோரள, கேகாலையில் இருந்து பொதுஜன பெரமுனவின் ராஜிகா விக்கிரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு செல்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!