தேசிய பட்டியலில் ஞானசார தேரர்

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் ஒரேயொரு தேசிய பட்டியல் ஆசனத்திற்கு கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனை பொதுபல சேனாவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் ஞானசார தேரர் ஆகியோரின் புதிய கட்சியே இந்த எ.ம.ச.க கட்சியாகும். இம்முறை நடைபெற்ற தேர்தலில் இக்கட்சி 67,758 வாக்குகளை பெற்றிருந்தது.

இதன்படி ஆசனங்களை கைப்பற்றாத இந்த கட்சிக்கு தேசிய பட்டியல் கிடைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!