சுரேன் ராகவன் இப்போது கனடிய பிரஜை அல்ல! – அதிகாரபூர்வமாக அறிவிப்பு.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கனடிய குடியுரிமையை துறந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் கலாநிதி சுரேன் ராகவனின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிவில் செயற்பாட்டாளர் ஒருவரால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கனடா மற்றும் இலங்கை குடியுரிமைகளைக் கொண்ட அவர் நாடாளுமன்றம் செல்ல முடியாது என்றும் அவரை தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது சட்டவிரோதம் என்றும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சுரேன் ராகவன் ஏற்கனவே கனடிய குடியுரிமையை இழந்து விட்டார் என்பதை, கனடிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் திகதியுடன் சுரேன் ராகவன் கனடிய குடியுரிமையை கைவிட்டு விட்டார் என்றும் அவர் இப்போது கனடிய பிரஜை அல்ல என்றும் கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!