7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் முடிவு! – தம்பிதுரை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கை முடிவாகும். அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்று மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தம்பிதுரை கூறியதாவது:

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள் ளாரே?

குடியரசுத் தலைவர் நிராகரித்தாலும், உச்ச நீதிமன்றம் சென்று முயற்சிப்போம் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெளிவாக கூறியுள்ளார். இவர்களை விடுவிக்க, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தாரோ, அதே வழியில் தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்யும் என்று நம்புகிறேன்.

7 பேரையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாரே?

அவர் சொல்ல வேண்டியதில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே கொள்கை முடிவு எடுத்துள்ளார். சட்டப்பேரவையில் தீர்மானங்கள் கொண்டுவந்துள்ளார். எதிர்க்கட்சித் தலை வர் அவர் இருக்கும்போது செய்ய வேண்டியதை செய்யா மல் விட்டுவிட்டு, எங்களிடம் வந்து சொல்லிக் கொண்டிருக்கி றார். இவ்வாறு தம்பிதுரை கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!