கூட்டமைப்பில் இருந்து ரெலோ பிரியப் போகிறதா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து ரெலோ தனித்து செயற்படவுள்ளதாக வெளியாகின்ற செய்திகள் உண்மையற்றவை என்ற ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

இது குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள அவர், “கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனம் எமது சம்மதம் இன்றி வழங்கபட்டுள்ளது எனது உண்மை . அதற்காக கூட்டமைப்பை பிளவுபடுத்த காரணமாக இருக்கப் போவதில்லை.

தம்மை பகடையாக வைத்து தமிழரசுக் கட்சியின் தலைவரை பிரிக்கலாம் என்றும் கூட்டமைப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பக்கம் செய்வார்கள் என்றும் தவறான எண்ணத்தில் சிலர் இவ்வாறு செய்திகளை பரப்பி வருகின்றனர்.

தமிழீழ விடுதலை இயக்கம் தமிழர்களின் இருப்பிற்கும் விடிவுக்காகவும் செயற்படும் அதேநேரம் தற்போது போன்றே கூட்டமைப்பில் மேலும் பலமாக பயணிக்கும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!