ரஷ்யாவில் 10 வயது சிறுவனால் கர்ப்பமான 13 வயது பள்ளி மாணவி!

ரஷ்யாவில் 10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறிவரும் பாடசாலை மாணவி, தமக்கு சிகிச்சை அளிக்க மூன்று மகப்பேறு மருத்துவமனைகள் மறுத்ததாக கவலை தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் தமது 10 வயது காதலனால் கர்ப்பமானதாக கூறிவரும் 13 வயதான பாடசாலை மாணவி தாரியா சுட்னிஷ்னிகோவா தற்போது மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாம் குடியிருக்கும் நகரில் மூன்று மகப்பேறு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததை அடுத்து, இன்னொரு நகரில் அமைந்துள்ள மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் கவனத்தை ஈர்த்த குறித்த சிறுமி, தமக்கு சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பிருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், தேவை ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள சிறுமியின் தாயார் மருத்துவமனையில் ஒப்புதல் அளித்துள்ளார். தாம் குடியிருக்கும் நகரில் இருந்து 40 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் நகரில் உள்ள மூன்று மகப்பேறு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளதை கவலையுடன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் தாம் பரவலாக அறியப்படுவதால் அந்த மறுத்துவமனை நிர்வாகங்கள் மறுத்தனவா அல்லது மகப்பேறில் ஏதேனும் சிக்கல் ஏற்படலாம் என அஞ்சியதாலா என தெரியவில்லை என்கிறார் அவர். ஆனால் தமக்கு இப்போதிருக்கும் கவலை என்பது, தற்போது தாம் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் மகப்பேறுக்கு உதவ பயிற்சி மருத்துவர்களை களமிறக்கியுள்ளனர்.

அந்த மருத்துவமனை நிர்வாகம் இங்கு பயிற்சி மருத்துவர்களைப் பயன்படுத்துவதை நான் கேள்விப்பட்டதால் நான் இங்கு மகப்பேறு சிகிச்சை எடுக்க விரும்பவில்லை என தமது சமூக ஊடக பக்கத்தில் சிறுமி தாரியா குறிப்பிட்டுள்ளார். ஆனால் இப்போது சிறப்பு மருத்துவர்களே மகப்பேறு சிகிச்சையை முன்னெடுக்க உள்ளதாக அறிந்ததில் நிம்மதியாக உள்ளது என தெரிவித்துள்ளார். தமது காதலன் ஈவன் 16 வயது நிரம்பிய பின்னரே தந்தை ஸ்தானம் ஏற்பார் எனவும், தம்முடன் அவர் இல்லை எனவும், சில நாட்களில் மட்டும் தம்முடன் தங்கிச் செல்வார் எனவும் தாரியா குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!