பாரீஸில் பூட்டிய வீட்டில் 30 வருடங்களாக அழுகிய நிலையில் கிடந்த சடலம்: சுத்தம் செய்ய முயன்றபோது வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

பாரீஸில் பிரான்ஸ் பிரதமர் வீட்டுக்கருகிலுள்ள கட்டிடம் ஒன்றை வாங்கிய கோடீஸ்வரர் ஒருவர் அந்த கட்டிடத்தை சுத்தம் செய்வதற்காக பணியாளர்களை அனுப்பியுள்ளார். அப்போது அங்கு இறந்த ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்த அந்த தொழிலாளர்கள், உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பொலிசார் விசாரணையில் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.

இறந்த அந்த நபரின் பெயர் Jean-Pierre Renaud என்பது தெரியவந்துள்ளது. அத்துடன், அந்த நபர் 30 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துபோயிருந்தது தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது. Renaud ஒரு குடிகாரராம், அத்துடன் அவரது உடலில் சில எலும்புகள் முறிந்துள்ளது தெரியவந்ததையடுத்து, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் முடிவு செய்துள்ளதால், பொலிசார் விசாரணை ஒன்றையும் துவக்கியுள்ளனர்.

ஆனால், சம்பவம் நடந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டதால் கொலை செய்த நபர் உயிருடன் இருப்பாரா என்ற சந்தேகமும் பொலிசாருக்கு எழுந்துள்ளது. இந்நிலையில், இப்படி ஒரு உடல் அழுகிய நிலையில் நீண்ட காலமாக தங்கள் வீடுகளுக்கு அருகில் கிடந்தது தெரியவந்ததையறிந்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வீட்டை 35.1 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கியுள்ள Jean-Bernard Lafonta, சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!