இத்தாலியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட தமிழ் இளைஞன்: தந்தையிடம் கூறிய கடைசி வார்த்தை!

தமிழகத்தை சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளைஞர், இத்தாலியில் மருத்துவம் பயின்று வந்த நிலையில், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கீ்ழ்கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சதானந்த். தேயிலை விவசாயம் செய்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் பிரதீக்ஷ் (21), இத்தாலியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வந்தார். மூன்றாம் ஆண்டு படித்து வந்த பிரதீஷ் நேற்று முன் தினம் திடீரென்று மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஒட்டு மொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரதீஷ் உறவினர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில், இவருடைய சகோதரர் இத்தாலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கெமிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் பகுதிக்கும், இவரது அறைக்கும் 50 கி.மீற்றர் தொலைவு மட்டுமே, பிரதீஷ் கல்லூரி அருகில் தனி அறை எடுத்து படித்து வந்துள்ளார்.

கொரோனா பாதிப்பு இத்தாலியில் அதிகரித்ததால், கல்லூரியில் இருந்து அனைத்து நண்பர்களும் சொந்த ஊருக்கு சென்று விட, பிரதீக்ஷ் மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால், அறையில் தனிமையில் இருந்துள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு மன அழுத்தம் அதிகமாக, இதனை அறிந்து கொண்ட அவரது சகோதரர் உடனடியாக தான் வசிக்கும் பகுதிக்கு அழைத்து சென்று, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஒரு மாத சிகிச்சைக்குப் பின், தனது சகோதரர் அறையில் தங்கி, அங்கிருந்தபடியே ஆன்லைனில் படித்து வந்துள்ளார். கூடவே சிகிச்சையும் பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 10-ஆம் திகதி தனது அப்பாவுடன் பிரதீஷ் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது, தனக்கு மன அழுத்தம் அதிகம் உள்ளதாக கூறியுள்ளார். உடனே அவருடைய அப்பா, இந்தியா வந்து விடு. எந்தப் பிரச்னையும் இருக்காது என்று கூறியுள்ளார். இதற்கு பிரதீக்ஷ் 13-ஆம் திகதி இந்தியா வருவதாக கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்திருக்கிறார்.

அதன் பின், அடுத்த சில நிமிடங்களில், தனது சகோதாரர் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். உயிரிழந்த அவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!