இருளில் மூழ்கியது இலங்கை!

கரவலப்பிட்டிய உப மின் நிலைய மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நேற்று நண்பகல் தொடக்கம் இரவு வரை இலங்கை முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டது.

நேற்று மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்ட இந்த மின்சாரத் தடையினால், நாடு முடங்கிப் போனதுடன், பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.

தொழிற்சாலைகள், அரச, தனியார் நிறுவனங்களில் பணிகள் தடைப்பட்டதுடன், வீதி சமிக்ஞை விளக்குகள் ஒளிராததால், கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் வாகனப் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.இணைய சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், நீர்விநியோகமும் தடைப்பட்டது.

இலங்கை முழுவதும் ஏற்பட்ட இந்த மின்சாரத் தடை நள்ளிரவுக்கு சற்று முன்னதாகவே வழமைக்குத் திரும்பியது.

நேற்று மாலை சில பகுதிகளுக்கு மீண்டும் மின்சார விநியோகம் மேற்கொள்ளப்பட்ட போதும், வடக்கு, வட மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களுக்கு பின்னிரவிலேயே முழுமையான மின் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது.

நாடு முழுவதையும் இருளுக்குள் தள்ளிய இந்த மின் தடைக்கான காரணங்களைக் கண்டறித்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்றை நியமித்துள்ளதாக, சக்தி மின் மற்றும் சக்தி டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!