ஆறு கோடி ரூபாயை செலவிட்ட நவீன் திஸாநாயக்க?

கடந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்கவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் அவரது மாமனாரான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரு ஜயசூரிய, நவீன் திஸாநாயக்க சம்பந்தமான பிரதான பௌத்த பிக்குகளின் அறிக்கைகளை பெற்று அவற்றை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

எனினும் நவீன் திஸாநாயக்க நுவரெலியா மாவட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை என்பதுடன் ஐக்கிய தேசியக் கட்சி அந்த மாவட்டத்தில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

அத்துடன் நவீன் திஸாநாயக்க தனது தேர்தல் பிரச்சாரங்களுக்காக 6 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!