புதிய கல்விக் கொள்கை குறித்து அமைச்சர்களிடம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

நாடு முழுவதும் ஒரே மாதிரியான புதிய கல்விக் கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்தது. இந்தக் கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களில் ஒன்றான மும்மொழிக் கொள்கை, ஒருங்கிணைந்த தொழிற்கல்வி, சமஸ்கிருதத்தை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தல் உள்ளிட்டவற்றிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு தமிழகமும் கடும் எதிர்ப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர்களுடன் காணொளி காட்சியின் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!