இலங்கையில் தேசியக்கொடியில் காணப்படுகின்ற இந்த இரண்டு நிறங்களும் நீக்கபட்டு, புதிய வடிவில் ஒருவித கொடி

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்பு அண்மையில் கண்டியில் நடைபெற்றபோது அங்கு பறந்த புதுவிதமான ‘சிங்கக் கொடிகள்’ தமிழ் முஸ்லிம் சமூங்களை அச்சத்திற்குள்ளாக்கியிருந்தன.

பொதுவாகவே சிறிலங்கா தேசியக் கொடியில் காணப்படுகின்ற செம்மஞ்சள், பச்சை நிறங்கள் நீக்கப்பட்டு தனியே வாளேந்திய சிங்கமும், நான்கு அரச இலைகளும் மாத்திரம் அமையப்பெற்ற கொடிகளே கண்டியில் பறக்கவிடப்பட்டிருந்தன.

சிறிலங்காவின் தேசியக்கொடியில் காணப்படுகின்ற செம்மஞ்சள் நிறம் இலங்கையில் வாழும் தமிழர்களையும், பச்சை நிறம் முஸ்லீம்களையும் அடையாளப்படுத்தும் வகையில் அமையப்பெற்றிருக்கும்.

இந்த இரண்டு நிறங்களும் நீக்கபட்டு, புதிய வடிவில் ஒருவித கொடி தயாரிக்கப்பட்டு பறக்கவிடப்பட்டிருந்தது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!