இலங்கையின் மூன்றாவது குடிமகனுக்கு பிரதமர் வாழ்த்து

ஸ்ரீலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்விலேயே பிரதமர் இவ்வாழ்த்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்து அங்கு உரையாற்றிய பிரதமர், தென் மாகாணத்திலிருந்து உருவாகிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவுசெய்யப்பட்டமையை எண்ணி தான் பெருமையடைகிறேன்.

அமைச்சரவை அமைச்சராக நீண்ட அனுபவம் கொண்ட மஹிந்த யாப்பா அபேவர்தன, சிரேஷ்ட உறுப்பினர் என்ற வகையில் நாடாளுமன்ற பாரம்பரியம் குறித்து சரியான புரிதல் கொண்டவர்.

1983 மே 18ஆம் திகதி இடம்பெற்ற ஹக்மன ஆசனத்தின், இடைத்தேர்தல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று முதல் நாட்டின் மூன்றாவது குடிமகனாக நியமிக்கப்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நினைவு கூர்ந்தார்.

புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு நாடாளுமன்றத்தில் பாரபட்சமின்றி சுதந்திரமாக செயல்படுவதற்கான பலமும், தைரியமும் கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!