பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தேசிய ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய விடயம்!

அரச வேலைவாயப்பு திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (21) பேசும் போது இதனை தெரிவித்தார். மேலும்,

“பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தில் பட்டாதாரிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இது தேசிய ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும். பயிற்சி நடவடிக்கைகளுக்கு இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டவர்கள் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் துறையில் பணிபுரியும் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு பின்னர் ஒரு மாதத்தின் பின்னர் குறித்த நியமனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். அத்துடன் நிராகரிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு அரசாங்கம் உரிய பதில் வழங்க வேண்டும் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!