நேற்றும் 23 பேருக்கு தொற்று!

நேற்று மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2927ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 18 பேர் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து நாட்டுக்குத் திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இருவர் சென்னையில் இருந்தும் மற்றையவர் துருக்கியில் இருந்தும் தாயகம் திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!