விக்கியின் பிள்ளைகளுக்கே தமிழ் தெரியாது!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெரிய தந்தையாவதற்கே விக்னேஸ்வரன் முயற்சிக்கிறார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரை தொடர் பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறினார்.

“இலங்கையின் பூர்வீக மொழி சிங்களம் அல்ல தமிழ் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த உரையால் நாம் குழப்பம் அடையவில்லை என்றும், ஏனெனில் விக்னேஸ்வரனின் பிள்ளைகளுக்கே தமிழ் மொழி தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!