வறுமையின் கொடூரம்: பசியால் உயிரிழந்த 5 வயது சிறுமி – நாட்டையே உலுக்கிய சம்பவம்!

உத்திர பிரதேசத்தில் பசியால் 5 வயது குழந்தை ஒன்று பசியால் துடிதுடித்து இறந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள நாக்ல விதிசந்த் கிராமத்தைச் சேர்ந்தவர் பப்பு சிங். இவரது மனைவி ஷீலா தேவி. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் வறுமையில் சிக்கித் தவித்துள்ளனர். கொரோனா என்பதால் பெரிதாக வேலைக்கிடைக்காததால் உணவிற்கே வழியின்றி தவித்து வந்த நிலையில், இவர்களது 5 வயதான மகளான சோனியா பசியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பசியினால் உயிரிழந்ததைத் தொடர்ந்து குறித்த குடும்பத்திற்கு உடனடியாக பல உதவிகள் பலரும் செய்து வருகின்றனர். இதுபற்றி தகவலறிந்த மாவட்ட நிர்வாகம், சோனியாவின் குடும்பத்திற்கு ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு, உஜ்வாலா கேஸ் இணைப்பு, டிபி நோயாளியான தந்தைக்கு படுக்கை வசதி, இரண்டு பிள்ளைகளின் கல்விக்கான உதவி என அனைத்தையும் மளமளவென செய்து முடித்துள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், வீடு கட்டித் தரவும் மாநில அரசு முன்வந்துள்ளது.

மேலும் குடும்பத்தினர் வேறு ஏதாவது மன அழுத்தத்தில் இருக்கின்றனரா என்று ஆராய்ந்து உரிய உதவிகள் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். சோனியாவின் வீட்டிற்கு சென்று அனைவருக்கும் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் மாவட்ட நிர்வாக அதிகாரி. தனது கடமை மறந்த அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய மனித உரிமை ஆணையம் பசிப்பிணிக்கு சோனியா உயிரிழந்தது பற்றி உத்தரபிரதேச மாநில அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!