தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை!

இளைஞர் சேவைகள் மன்றத்தின் பயிற்சிப் பாடநெறிகளைப் பயில விரும்பும் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி அதிகார சபையின் ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கும் ராஜாங்க அமைச்சர் திருமதி சீதா அரம்பொலவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு கலந்துரையாடப்பட்டது.

இதனூடாக உலகத் தொழிற்சந்தைக்கு ஏற்றவிதத்தில் பாடநெறிகளை தெரிவு செய்வதற்கு அவர்கள் வழிகாட்டப்படுவார்கள் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ் குறிப்பிட்டார்.

இளைஞர் யுவதிகளை தொழில் வாய்ப்புக்களில் ஈடுபடுத்துவதற்குப் பொருத்தமான வேலைத்திட்டமொன்றை வகுப்பது இவ்விரு அமைச்சுக்களினதும் பொறுப்பாகும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!