சசிகலா விடுதலையாகி அரசியலில் ஈடுபட்டாலும் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது: வெளிப்படையாக பேசிய பிரபலம்!

சிறையில் இருந்து சசிகலா விரைவில் வெளியில் வந்துவிடுவார் என கூறப்பட்டு வரும் நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று பா.ஜ.க. பொதுச்செயலாளர் சீனிவாசன் கூறியுள்ளார். மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர்கள் ஆலோசனை திருச்சி கொள்ளிடம் டோல்கேட்டில் நடந்தது. மதுரை கோட்ட பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலாளருமான சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக சட்டமன்ற தேர்தல் கொரோனா காரணமாக தள்ளிப்போக வாய்ப்பு இல்லை. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. ஆகவே அமைப்பு ரீதியான பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். சசிகலா வந்து தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் தமிழக அரசியலில் எந்த தாக்கமும் ஏற்படாது.

4 ஆண்டுகளால் அ.தி.மு.க.வில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆகவே அவரால் கட்சியை கைப்பற்ற முடியாது. தமிழகத்தில் 60 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜ.க. வலுவாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்து தான் தெரிவித்துள்ளோம். 90 சதவீத வாக்குச்சாவடிகளில் பா.ஜ.க. வலுவாக இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி பற்றி தெரியவரும் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!