சீனாவில் ஆசன வாய் வழியாக வயிற்றுக்குள் செலுத்தப்பட்ட பொருள்: மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சீனாவை சேர்ந்த 53 வயதான நபர் ஒருவர் தனது வயிற்றில் கடுமையான வலி இருப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்து, எக்ஸ்ரே எடுத்ததில் உள்ளே இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அவரது வயிற்றுக்குள் மிகப்பெரிய பீர் கிளாஸ் ஒன்று இருந்துள்ளது. பின்னர் அந்த நம்பருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது வயிற்றில் இருந்து அந்த பீர் கிளாஸ் வெளியே அகற்றப்பட்டது.

இதனையடுத்து, சுமார் 6 சென்டிமீட்டர் நீளமும் 5 சென்டி மீட்டர் விட்டமும் கொண்ட அந்த பீர் கிளாஸை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். இதன் பின்னர், அந்த நபர் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல் காப்பாற்றப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.

மேலும் அந்த பீர் கிளாஸ் எப்படி அவரது வயிற்றுக்குள் சென்றது என்பது குறித்து அந்த நபர் எந்த விளக்கமும் கொடுக்காத நிலையில் அவர் அந்த கிளாசை தனது ஆசன வாய் வழியாக வயிற்றுக்குள் செலுத்தி இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!