போலீசாரின் கண்முன்னே அடித்து கொல்லப்பட்ட கொலை குற்றவாளி: கிராம மக்களின் வெறிச்செயல்!

இந்தியாவில் கொலை செய்த குற்றவாளியை பொலிசார் கண் முன்னிலையில் கிராம மக்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், குஷி நகருக்கு கோரக்பூரில் இருந்து ஸ்கூட்டியில் வந்த நபர் ஒருவர், குமார் சிங் என்ற ஆசிரியரை பார்க்க வந்திருப்பதாகவும், சுதிர் குமார் சிங் தனது சகோதரரின் நண்பன் என்றும் தெரிவித்துள்ளார்.

சுதிர் குமார் சிங் வரும் வரைக்கும் அங்கிருக்கும் டீக்கடையில் காத்திருந்த அந்த நபர், சுதிர் குமார் சிங் வந்ததுடன் அந்த நபர் திடீரென்று தனது தந்தையின் துப்பாக்கியால், ஆசிரியரை சுட்டுக்கொலை செய்து உள்ளார். இதனால் பதற்றம் அடைந்த அருகில் உள்ளவர்கள் அவரை பிடிக்க முயன்ற போது, அப்போது கையில் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி அருகில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் ஏறியுள்ளார்.

கையில் துப்பாக்கி இருந்ததால் அவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அந்த நபரை சரண் அடையும் படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அந்த நபர் பொலிசாரை சுட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். பின்னர் பொலிசாரிடம் இருந்து தப்பிக்க மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.

அதற்குள் பொதுமக்கள் அந்த நபரை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளார். பொலிசார் அவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தும் நடக்கவில்லை. இறுதியில் அந்த நபரை அடித்தே கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக காவல் நிலையத்தின் இன்சார்ஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!