கொரோனாவை தொடர்ந்து மிகப்பெரும் பாதிப்பை சந்திக்கவிருக்கும் ஜேர்மனி!

ஒரு பயங்கர பன்றி வைரஸ் ஜேர்மனிக்குள் நுழைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த செய்தி மட்டும் உறுதி செய்யப்பட்டால், அது ஐரோப்பாவிலேயே அதிக அளவில் பன்றி இறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடான ஜேர்மனியை கடுமையாக பாதிக்கும். ஜேர்மன் மாகாணமான Brandenburgஇல் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் ஒரு நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட பன்றிகளை 10 நாட்களுக்குள் கொன்றுவிடும், ஆனால் மனிதர்களை அது பாதிக்காது. போலந்து எல்லைக்கருகிலுள்ள ஒரு இடத்தில் இறந்துகிடந்த காட்டுப்பன்றி ஒன்றின் உடலில் இந்த தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தொற்று ஒரு காட்டுபன்றியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் கூட, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் பன்றி இறைச்சி ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ஜேர்மனி கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது இந்த பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால், அது அந்நாட்டுக்கு இன்னொரு பலத்த அடியாக இருக்கக்கூடும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!