தனது தங்கையை தண்ணீர் தொட்டியில் போட்டு கொன்ற 5 வயது சிறுமி: போலீசாரிடம் சொன்ன அதிர்ச்சி காரணம்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்கஷானம் கிராமத்தை சேர்ந்தவர் காவியா. அவருக்கு ஐந்து வயதில் நிர்மலா என்ற மகளும், ஹேமாஸ்ரீ என்ற கைக் குழந்தையும் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறந்தது முதல் பெற்றோர்கள் நிர்மலாவை சரியாக கவனிக்காததால் விரக்தி அடைந்த முதல் குழந்தை தனது தங்கையை தண்ணீர் தொட்டியில் தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் படுக்க வைத்திருந்த குந்தையை ஹேமாஸ்ரீயைக் காணாமல் தேடிய பெற்றோர், பின்பு வீட்டின் மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியிலிருந்து குழந்தையை பிணமாக மீட்டுள்ளனர். இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த பொழுது, 5 வயது குழந்தையான நிர்மலாவிடம் பொலிசார் கேட்டுள்ளனர்.

அப்போது தங்கை பிறந்தது முதலே அவள் மீது பெற்றோர்கள் அதிக பாசத்துடன் இருந்தனர். இதனால் என் தங்கையை தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டதாக கூறியதையடுத்து பெற்றோர்கள் மற்றும் பொலிசார் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது என்னசெய்வது என்று தெரியாமல் கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் பொலிசார் குறித்த 5 வயது குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன் மீது வைத்திருந்த பாசம் இரண்டாவது பிறந்த தங்கையின் மீது பெற்றோர்கள் வைத்ததால் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!