தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் இன்று ஆரம்பம்!

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 33வது நினைவேந்தல் இன்று தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகிறது.

12 நாட்கள் நீராகாரமும் இன்றி உண்ணாவிரதத்தை முன்னெடுத்த தியாக தீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தியாக தீபம் திலீபனின் நினைவு நாள், இன்று ஆரம்பமாகின்ற நிலையில், பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி உள்ளிட்ட தமிழர் தாயகத்தின் முக்கிய இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.

எனினும், தடைகளைத் தகர்த்தெறிந்து உணர்வெழுச்சியுடன் நினைவேந்தலை நடத்தவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!