இலங்கையில் 13வது கொரோனா மரணம் பதிவானது!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக நேற்று (14) 13வது மரணம் பதிவாகியுள்ளது.

பஹ்ரைனில் இருந்து செப்டம்பர் 2 அன்று நாடுதிரும்பிய குறித்த நபர் சிலாபம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார் என்று இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய மாலுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!