13 ஆண்டுகளாக கடவுசீட்டு இன்றி வெளிநாட்டில் சிக்கித்தவித்த இந்தியர்: பின்னர் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த 13 ஆண்டுகளாக பாஸ்போர்ட் இல்லாமல், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்த இந்தியருக்கு நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டத்தின் மூலம் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்தியாவை சேர்ந்தவர் Pothugonda Medi. இவர் கடந்த 13 ஆண்டுகளாக சரியான ஆவணங்கள் இல்லாமல், சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் 13 ஆண்டுகளாக தவித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்நாட்டு அரசு, விசா மீறுபவர்களுக்கு அதிகப்படியான அபராதங்களிலிருந்து விலக்கு அளித்துள்ளதால், அதன் மூலம் இவர் தப்பியுள்ளார்.

எந்தவொரு சரியான ஆவணமும் இல்லாமல் கடந்த 13 ஆண்டுகளாக Pothugonda Medi ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்தார். கடந்த திங்கட் கிழமை 47 வயதை எட்டிய இவருக்கு, இது ஒரு சிறந்த பிறந்த நாள் பரிசாக மாறியது. ஞாயிற்றுக்கிழமை ஓவர்ஸ்டே அபராதத்தில் கிட்டத்தட்ட அரை மில்லியன் திர்ஹாம் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் ஒரு விமானத்தின் மூலம் வீட்டிற்கு பறக்கிறார்.

விசா மீறல் செய்பவர்களுக்கு அதிகப்படியான அபராதங்களிலிருந்து விலக்கு அளிக்க ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியைப் பெற துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் உதவி கோரியதையடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் சொந்த ஊருக்கும் அனுப்புவது சாத்தியமானது. இந்த விலக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அனைவருக்கும் மார்ச் 1, 2020-க்கு முன்னர் காலாவதியானவர்கள் மற்றும் ரத்து செய்யப்பட்ட அனைவருக்கும் பொருந்தும். தற்போது கொரோனா காலம் என்பதால், நவம்பர் 17-ஆம் திகதி வரை இவர்கள் நாட்டை வெளியேற ஐக்கிய அரபு அமீரகம் அவகாசம் கொடுத்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சுற்றுலா விசா மூலம் பணிக்கு வந்த இவரை, அழைத்து வந்த நபர் கைவிட்டுவிட்டதால், தன்னுடைய பாஸ்போர் இல்லாமல் தவித்து வந்துள்ளார். இதனால் அவர் அங்கு கிடைத்த வேலைகளை செய்து வந்துள்ளார். ஆனால் இந்த கொரோனா தொற்று காரணமாக வேலைகள் எதுவும் சரியாக கிடைக்காத காரணத்தினால், இந்திய தூதரகத்தின் உதவியை அவர் நாடியுள்ளார்.

ஆனால், அவர் இந்திய குடிமகன் தான் என்பதை நிரூபிப்பதற்கு எந்த ஒரு உத்தியோகப்பூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால், அவருக்கு தூதரகத்தால் உடனடியாக உதவுவது என்பது கடினமாக இருந்தது. போத்துகொண்டாவின் குடும்பத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு சமூகக் குழுவின் உதவி நாடப்பட்டது. சமூக சேவகர் ஸ்ரீனிவாஸின் ஆதரவுடன், அவருடைய பழைய ரேஷன் கார்டு மற்றும் தேர்தல் அடையாள அட்டையின் நகல்களை அவரது சொந்த இடத்திலிருந்து பெற முடிந்தது. அவர் கொடுத்த சில விவரங்கள் பொருந்தவில்லை, ஆனால் அவர் ஒரு இந்தியர் என்பதை மட்டும் உறுதிபடுத்த முடிந்தது.

மேலும், Pothugonda Mediஆவணங்கள் வேண்டும் என்பதால், பாஜகவை சேர்ந்த ஒருங்கிணைப்பு தலைவர் டி.ஆர்.ஸ்ரீனிவாஸ் பேஸ்புக்கில் உதவி கோரி அவருடைய புகைப்படத்தை பதிவிட்டதன் மூலம், அவருடைய கிராமத்தில் இருந்து சில ஆவணங்களை பெற முடிந்தது. ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. ஏனெனில் பெறப்பட்ட நான்கு ஆவணங்களிலும் நான்கு வெவ்வேறு வழிகளில் பெயர் இருந்தது. இதனால் அதை எல்லாம் தற்போது சரி செய்யப்பட்டு, அவருடைய பிறந்த நாளான நேற்று பிறந்த நாள் பரிசாக அவரிடம் சொந்த ஊருக்கு செல்லலாம் என்பதை தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அபராத தள்ளுபடியை பயன்படுத்தி, தூதரகம் அவருக்கு இலவச விமான டிக்கெட்டையும் வழங்கியது. ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கம் அவருக்கு மேலதிக அபராதமான 500,000 திர்ஹாம்களை(இந்திய மதிப்பில் 1,00,22,936 கோடி ரூபாய்) தள்ளுபடி செய்திருப்பது போத்துகொண்டா அதிர்ஷ்டம் என்றே அவர்கள் கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!