ரஷ்யாவில் கொடூரமாக கொல்லப்பட்டு அமிலத்தில் கரைக்கப்பட்ட உடல்: அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

ரஷ்யாவில் பாலே நடனக் கலைஞரான அழகிய இளம்பெண் ஒருவர் திடீரென மாயமானார். ஆறு ஆண்டுகளுக்கு முன் மாயமான Olga Demina (25), இன்று வரை கிடைக்கவில்லை. Olga காணாமல் போனதாக கருதி, அவரை பொலிசார் தேடி வந்த நிலையில், தற்போது அவரது வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. Olgaவின் முன்னாள் மேலாளரும் காதலருமான Malkhaz Dzhavoev என்பவர் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் Olgaவை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி, அமிலத்தில் கரைத்திருக்கலாம் என பொலிசார் நம்புகிறார்கள்.

அதற்கு ஆதாரமாக Dzhavoevஇன் தந்தை அமிலம் வாங்கியதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது. மேலும், Olga காணாமல் போன அன்று கடைசியாக Dzhavoevஇன் மொபைல் சிக்னல் பதிவான இடம் ஒன்றிற்கு அருகே, ஒரு மண்டையோடும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் Olga காணாமல் போவதற்கு சற்று முன்புதான், Dzhavoev அவரை ஒரு நிகழ்ச்சியில் நடனமாட வருமாறு கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை Dzhavoev மறுத்துள்ளதோடு, Olga ஒரு வீடு வாங்கும் மோசடியில் சிக்கியதாகவும், அதனால் வெளிநாட்டுக்கு தப்பியோடி வாழ்ந்து வரலாம் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில், Olga இறப்பதற்குமுன், அவர் Dzhavoevக்கு ஏராளமான பணம் கொடுத்ததாக Olgaவின் தாய் தெரிவித்துள்ளார்.

Olga நிர்வாணக் கோலத்தில் இருக்கும் படங்கள் Dzhavoevஇடம் இருந்தன என்றும், பணம் கொடுக்காவிட்டால் அவற்றை ஒன்லைனில் வெளியிடுவதாக Dzhavoev மிரட்டியிருக்கலாம் என்றும் கூறுகிறார். ஆனால், அவ்வளவு பணம் கொடுத்த பின்னரும் அந்த படங்கள் ஒன்லைனில் வெளியானதாகவும் தெரிவித்துள்ளார் Olgaவின் தாய்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!