மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்: நால்வருக்கு தூக்கு!

மலேசியாவில் தமிழர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நான்கு பேருக்கு உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மலேசியாவின் Malacca-வில் வசித்து வந்த மலாக்கா தமிழர் B.R.Sivan என்பவர் கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் 4-ஆம் திகதி இரவு உள்ளூர் நேரப்படி 10.45 மணிக்கு வீட்டின் முன்னால் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை அங்கிருக்கும் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் இந்த வழக்கு விசாரணையில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றவாளிகளான M.P. Namasivayam(30), P. Narendranpathy(33), P. Sethupathi(32) மற்றும் Aiman Mazlan (27) ஆகியோருக்கு நீதிபதியான Mohd Firuz Jaffril மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

நீதிபதியின் இந்த தீர்ப்புக்குபின், குற்றவாளிகள் கண்ணீர் விட்டு அழுததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இந்த நான்கு பேருடன் சேர்ந்து A.Satish(26) மற்றும் G.Vincent Lawrence(28) என மொத்தம் ஆறு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் இவர்கள் இரண்டு பேர் மீது சரியான ஆதாரங்கள் திரட்ட முடியாத காரணத்தால், அவர்களை குற்றமற்றவர்கள் என்று கூறி நீதிபதி தீர்ப்பளித்து விடுதலை செய்தார். இந்த வழக்கு விசாரணைக்காக 36 அரசுத்தரப்பு சாட்சிகளும் 10 தற்காப்புத் தரப்பு சாட்சிகளும் சாட்சியம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!