மனோ வசமாகிறது மைத்திரியின் அமைச்சு?

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வசமுள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு, மனோக ணேசனின் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.

கூட்டரசின் அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் 13 ஆம் திகதிக்குள் நடைபெறவுள்ளது. இதன்போது விஞ்ஞானபூர்வமான அடிப்படையிலேயே அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்படவுள்ளன.

இதன்படி ஒரே விடயதானத்துடன் தொடர்புடைய திட்டங்களுக்கு தனித்தனியே அமைச்சுகளை நியமிக்காமல் அவை அனைத்தையும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவருவதே மைத்திரியின் திட்டமாக இருக்கின்றது. தனது இந்த நிலைப்பாட்டை நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் வெளிப்படுத்தியுள்ளார்.

தனது கட்டுப்பாட்டின்கீழுள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு, மனோ கணேசன் தற்போது வகிக்கும் அமைச்சுடன் இணைக்கப்படும் என்ற தகவலையும் அரச தலைவர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட அமைச்சுகளுக்கும் இதே நடைமுறை கடைபிடிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!