பிரித்தானியாவில் 13 வயது சிறுவனால் கர்ப்பமான இளம்பெண்: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

தனது தோழி ஒருவர் நீங்கள் பாட்டி ஆகிவிட்டீர்கள் தெரியுமா என்று கேட்டதும் அதிர்ந்துபோனார் அந்த தாய், காரணம், அவரது மகனின் வயது 13 மட்டுமே! உடனடியாக வீட்டுக்கு ஓட்டம் எடுத்த அந்த தாயின் மனதில் தன் மகன் தவிர்த்து மற்றொரு நபரின் பெயர் நினைவுக்கு வந்தது, அந்த பெயர் Leah Cordice (20). Leah அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வருவதுண்டு. பின்னர் குடும்ப நண்பர் போல் ஆகிவிட்ட நிலையில், அந்த சிறுவனை கவனித்துக்கொள்ளும் ஆயா போலவே ஆகிவிட்டார் Leah.

வீட்டுக்கு வந்த அந்த 13 வயது சிறுவனின் தாய் மகனிடம் விசாரிக்க, அவன் உண்மையைச் சொல்லி, தான் உண்மையை வெளியில் சொல்லக்கூடாது என Leah மிரட்டியுள்ளதாகவும் கூறியுள்ளான். மறு நாள் பொலிசாரிடம் சென்றுள்ளார்கள் அந்த சிறுவனும் அவரது தாயும். ஆனால், அப்படியே கதையை மாற்றிவிட்டார் Leah.

தன்னை அந்த சிறுவன் வன்புணர்வு செய்துவிட்டதாக குண்டை தூக்கிபோட்டார் Leah. இதற்கிடையில் Leah கர்ப்பமுற, அது தன் குழந்தை என அவரது கணவரும் நம்பிக்கொண்டிருக்க, விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்தன. அந்த சிறுவன் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் Leah, அவனை துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவனது தாய் இல்லாதபோது மட்டும் அந்த வீட்டுக்கு செல்லும் Leah, அவனது நண்பர்கள் யாராவது இருந்தால் அவர்களை துரத்திவிடுவாராம். பின்னர் Leahவை பொலிசார் கைது செய்தார்கள்.

அவருக்கு இரண்டரையாண்டுகள் சிறைத்தண்டனை விதிகப்பட்டது. இதற்கிடையில் Leahவுக்கு பெண் குழந்தை ஒன்று பிறக்க, அதை அரசு காப்பகத்திற்கு அனுப்பிவிட்டார்கள், அதை ஒரு குடும்பம் தத்தெடுத்துச் சென்றுவிட்டது. DNA பரிசோதனையில் அந்த குழந்தை Leahவின் கணவருடையது அல்ல என்றும், அந்த சிறுவனுடையதுதான் என்பதும் தெரியவந்தது.

இப்படி கதை ஒருபக்கம் செல்ல, மறுபக்கம் அந்த குழந்தை தன்னுடையது என்பது தெரியவர, மனோரீதியாக பாதிக்கப்பட்டுள்ளான் அந்த சிறுவன். அந்த குழந்தை தன்னுடையது என்றாலும், சிறுவனான அவனால் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் அவன் தவிப்பதோடு, அவன் கடுமையான மன அழுத்தத்திற்குள்ளகியிருப்பதாக நீதிமன்ற மன நல ஆலோசகர் கண்டறிந்துள்ளார். அந்த குழந்தைக்கு 18 வயது ஆன் பின்னரே அந்த சிறுவன், அதாவது, அவளது தந்தை, அவளை சந்திக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!