அதிரடி தீர்மானத்தை அறிவித்தன திலீபனுக்காய் ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகள்

தியாக தீபம்’ திலீபனின் நினைவு நாளான 26ம் திகதி யாழ்ப்பாணம் – செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் திலீபனுக்காய் ஒன்றிணைந்துள்ள தமிழ் தேசியக் கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு அதிரடியாக தீர்ம்மானித்துள்ளன.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவேந்தலை தடை செய்யக் கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கில் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை இன்று மீளவும் நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், 10 தமிழ் அரசியல் கட்சிகள் தற்போது ஒன்றுகூடி ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தன. இதன்போது, வரும் “26ம் தினதி தியாகி திலீபனின் நினைவேந்தலை ஆலயங்களில் விசேட பூசைகள் மற்றும் வீடுகளில் இருந்தவாறும் நினைவு கூருமாறு” அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் “அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செல்வச்சந்நிதி ஆலயத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கவும்” அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் “28ம் திகதி வடக்கு, கிழுக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு” விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஹர்த்தால் (கதவடைப்புப்) போராட்டத்திற்கு, சமூக சிவில் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவிக்க வெண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் மொழியை பேசும் முஸ்லிம் மக்களும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும், மலையக அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்களும் ஆதரவு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!