மரணதண்டனை குற்றவாளி விடுவிப்புக்கு எதிரான மனு மீதான விசாரணையில் இருந்து நீதியரசர் விலகல்!

மிருசுவிலில் 8 பேரை படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டசார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதியினால், பொது மன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் இருந்து, நீதியரசர் பிரியந்த ஜயவர்தன விலகியுள்ளார்.

மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக சுனில் ரத்நாயக்க தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமில், தாம் அங்கம் வகிப்பதால் இந்த முடிவை எடுத்ததாக நீதியரசர் பிரியந்த ஜயவர்தன பகிரங்க நீதிமன்றத்தில் நேற்று அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியினால், சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதேவேளை, இந்த மனுவை எதிர்வரும் பெவ்ரவரி மாதம் 08ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, பி.பத்மன் சூரசேன மற்றும் யசந்த கோத்தாகொட ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!